எம்மைப் பற்றி

தொலைநோக்கு இலங்கையில் பயிரிடப்படும் அனைத்துப் பயிர்களினதும் உற்பத்திப் பயனுறுதித் தன்மையை மேம்படுத்துவதற்காக சேதன மற்றும் அசேதன உரங்களை உரிய தரங்களில் கொள்வனவு செய்து வழங்குதல் மற்றும் அவற்றின்  பயன்பாட்டை உறுதிப்படுத்துதல். 

செயற்பணி – உரத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் வழிமுறைகளுக்கு அமைய உரிய அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைத்து, விஞ்ஞான ரீதியான சிபாரிசுகளின் படி உரத் தேவையை மதிப்பீடு செய்தல், உர இறக்குமதி மற்றும் இருப்புகளை நிர்வகித்தல், உரிய தரத்தைக் கொண்ட உரங்களை விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்பவற்றை உறுதி செய்தல், சேதன மற்றும் அசேதன உரப் பாவனையின் போது சூழல் நட்புடன் கூடிய விதத்தில் உரப் பாவனை மேற்கொள்வதை ஊக்குவித்தல், விவசாய சமூகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் உர மானிய நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துதல் மற்றும் உரப் பாவனை தொடர்பாக  காணப்படும் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளல்.

செயற்பாடுகள் :-

  • 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க உரங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்தல்
  • விஞ்ஞான ரீதியான உரச் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு உரத் தேவைகளை முறையாக இனம் காணுதல்
  • உரத் தேவைகள் உரிய நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல்
  • உரங்களின் தரநிலை மற்றும் தரத் தன்மை என்பவற்றை உறுதி செய்தல்
  • ஒவ்வொரு பயிருக்குமான சிபாரிசு செய்யப்பட்ட உரப் பாவனையை ஒழுங்குபடுத்துதல்
  • அரசாங்கத்தின் உர மானிய வேலைத் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துதல்
  • உரம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவனங்களைப் பலப்படுத்துதல்
  • உரப் பாவனைத் துறையில் நிகழும் முறைகேடுகளைக் குறைத்தல் மற்றும் உரம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடுதல்
  • உரப் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பான தரவுத் தொகுதியொன்றைப் பேணி வருதல்