சேதனப் பசளை பாவனையை பிரபல்யப்படுத்தல்

தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படுகின்ற இரசாயன உரத்தில் சுமார் 95% வீதம் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனவே, இரசாயன உர இறக்குமதிக்காக வருடந்தோறும் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்வதற்கு அரசுக்கு நேர்ந்துள்ளது. அதேபோன்று, நீண்டகால அடிப்படையில் உணவுப் பயிர்ச் செய்கைகளுக்கு இரசாயன உரத்தை மட்டும் இட்டு வருவதால், மண் வளம் குன்றிக் காணப்படுவதுடன், பயிர் விளைவுப் பெருக்கம் குறைவதற்கும், நிலக்கீழ் நீர் மாசடைவதற்கும் இது காரணமாக அமைந்துள்ளது.

இப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக நிலைபேறான விவசாயத் துறையைக் கட்டியெழுப்பும் வகையில், 2008 ஆம் வருடத்தில் சேதனப் பசளை உற்பத்தியையும், பாவனையையும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கங்களாவன:

  • சேதனப் பசளை உற்பத்தியை அறிமுகம் செய்தலும், சேதனப் பசளைப் பாவனைக்கு விவசாயிகளை ஊக்குவித்தலும்.
  • இரசாயன உர வகைகளுக்கு மேலதிகமாக, செதனப் பசளைப் பாவனையை அறிமுகப்படுத்துவதினூடாக, பயிர் விளைச்சலை அதிகரித்தலும், மண்ணின் வளத்தை கூட்டிக் கொள்ளலும்.
  • சேதனப் பசளை உற்பத்திக்காக தொழில்நுட்டப முறைகளை அறிமுகம் செய்வதினூடாக, உரிய தர நிர்ணயங்களுடன் கூடிய சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடுத்தல்.
  • மூன்று வருட காலப்பகுதிக்குள் சேதனப் பசளை உற்பத்தியையும், பாவனையையும் பிரபல்யப்படுத்தி இரசாயன உர இறக்குமதியை 25% வீதத்தினால் குறைத்துக் கொள்ளல்.